×

ராமராக நடிப்பதால் அயோத்தியில் ரூ.3 கோடிக்கு நிலம் வாங்கிய ரன்பீர் கபூர்

மும்பை: ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரன்பீர் கபூர், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா நிறுவனத்தின் பிரீமியம் பிளாட் திட்டத்தில் ஒரு புதிய நிலத்தை வாங்கியுள்ளார். சரயு நதிக்கரையில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘தி சரயு’ என்ற அதிநவீன நகரிய அமைப்பில், 2,134 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த நிலத்தை அவர் வாங்கியுள்ளார்.

இந்த சொத்து பரிவர்த்தனையின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ. 3.31 கோடியாகும்.அவர் கூறுகையில், ‘‘அயோத்தி என்னை தேர்ந்தெடுத்துள்ளது, அந்த அழைப்பிற்கு நான் வெறும் பதிலளித்துள்ளேன். அயோத்தி நமது வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நிலம், என் குடும்பத்திற்கான எனது பாரம்பரிய சொத்தின் ஒரு அங்கமாக மாறும். ராமராக நடிக்கும்போது இந்த நிலத்தை வாங்கியிருப்பது மகிழ்ச்சி’’ என்று கூறியுள்ளார்.

Tags : Ranbir Kapoor ,Ayothi ,Mumbai ,Ramayana ,House of Abhinandan Loda ,Uttar Pradesh ,Ayodhya ,Sarayu River ,
× RELATED ஹீரோ ஆகிறார் துஷாந்