×

அமெரிக்காவில் உருவான ஆன்சைட் அலப்பறைகள்

 

சென்னை: ‘கருப்பு வெள்ளை’ என்ற இசை ஆல்பத்தை தொடர்ந்து ராம் பிரசாத் பார்த்தசாரதி இயக்கியுள்ள ‘ஆன்சைட் அலப்பறைகள்’ என்ற ஆல்பம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. ராம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆகாஷ் டி.பிரபு, ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளனர். எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்க, வசந்த் பால் ஒளிப்பதிவு செய்துள்ளார். ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற ஆல்பத்தின் மூலம் இசையுலகிற்கு வந்த ராம் பிரசாத் பார்த்தசாரதி, ‘ஸ்டிரிங்க்ஸ் ஆஃப் சைலன்ஸ்’ மற்றும் ஐபிஎல் போட்டிக்கு பெப்சி விளம்பரத்தை உருவாக்கியவர்.

அவர் கூறுகையில், ‘ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளசுகள், அமெரிக்காவுக்கு ஆன்சைட் சென்று வாழ்க்கையை எப்படி அனுபவிக்கின்றனர் என்பதை இளமை துள்ளலுடன் உருவாக்கியுள்ளேன். ஐடியில் பணியாற்றும் இளசுகள் நடிக்க, அமெரிக்காவில் ஆல்பம் படமாகியுள்ளது. இண்டோ பிரெஞ்ச் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் சிறந்த ஆல்பத்துக்கான விருது, ஹை டாட்ராஸ் பிலிம் அண்ட் வீடியோ பெஸ்டிவலில் சிறந்த இயக்குனர், சிறந்த இசை வீடியோவுக்கான விருது பெற்றது. அமெரிக்காவின் எக்ஸ்ஃபிரிமெண்டல் பிலிம் அண்ட் மியூசிக் வீடியோ பெஸ்டிவலில் சிறந்த நடிப்புக்கான விருது கிடைத்தது’ என்றார்.

 

Tags : US ,Chennai ,Ram Prasad Parthasarathy ,Ram Productions ,Akash D. Prabhu ,Sruthi Periyasamy ,M.S. Jones Rupert ,Vasanth Paul ,Pepsi ,IPL ,
× RELATED 29 விமர்சனம்