×

தேவிஸ்ரீ பிரசாத் ஜோடி மிருணாள் தாகூர்

ஐதராபாத்: தெலுங்கில் வேணு எல்டன்டி இயக்கும் படம், ‘எல்லம்மா’. முதலில் இப்படத்தில் நானி, நிதின் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இதில் நடிக்க அவர்கள் மறுத்துவிட்ட நிலையில், இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஹீரோயினாக சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரில் ஒருவர் நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால், அவர்களின் கால்ஷீட் உடனடியாக கிடைக்காத நிலையில், ‘சீதா ராமம்’ என்ற படத்தில் நடித்திருந்த மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா பிலிம்ஸ் தயாரிக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் ஹீரோக்களாக நடித்து வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் தேவி பிரசாத் இணைந்துள்ளார்.

Tags : Devisree Prasad ,Mrunal Tagore ,Hyderabad ,Venu Eldanti ,Nani ,Nithin ,Sai Pallavi ,Keerthy Suresh ,
× RELATED பூஜாவுக்காக ஆட்டோவில் சென்ற ஹீரோ