×

காதல் பற்றி தமன்னா புதிய விளக்கம்

இந்தி நடிகர் விஜய் வர்மாவுடனான காதல் முறிவுக்கு பிறகு தமன்னா அளிக்கும் பேட்டிகளில், ஒருமுறையாவது காதலை பற்றிய தத்துவத்தை பேசாமல் இருப்பதில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளை கூறியிருக்கிறார். அவர் பேசுகையில், ‘காதல் என்றால், அது என்ன உறவு என்பதில் மக்கள் குழப்பம் அடைகிறார்கள் என்று நினைக்கிறேன். காதல் ஒரு பரிவர்த்தனையாக மாறும் அபாயம் இருக்கிறது. உங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து, மற்றவர்கள் நீங்கள் விரும்புவதை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பும் தருணத்தில், காதல் வெறும் வியாபாரம் ஆகிவிடுகிறது.

அது ஒரு பரிவர்த்தனைதான். இருவர் தனித்தனியாக ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். ஆனால், அந்த உறவே காதலை நன்கு வரையறுக்கிறது என்று அர்த்தம் இல்லை. நாம் ஒருவரை மனதார நேசிக்க வேண்டும் என்றால், அவர்களை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும். உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது வலிய திணிப்பதன் மூலம் அவரை நீங்கள் நேசிக்க முடியாது.

ஒரே ஒரு உண்மையான காதல் என்ற வழக்கமான சினிமா கருத்தை உடைத்து, காதல் என்பது ஒரே ஒரு அனுபவத்துக்கு மட்டும் உரியதல்ல; காதல் என்பது ஒருமுறை மட்டும் நிகழும் ஒன்றல்ல; நீங்கள் தீர்மானிக்கும் வரை அது நிகழலாம். அந்த உணர்ச்சி என்பது வெளிப்புற சக்திகளால் தீர்மானிக்கப்படுவது இல்லை. அது உள்ளுக்குள்ளேயே உருவாக்கப்படுகிறது’ என்று சொல்லியிருக்கிறார்.

Tags : Tamanna ,Vijay Varma ,
× RELATED கணவரை பிரிந்து வாழும் நடிகை விநோத நோயால் கடும் பாதிப்பு