- ஏஐ
- டாக்டர்
- ஜே.பி. லீலா ராம்
- ராஜு.கே
- சரவணன்.பி
- ரேகா.எல்
- பிராண்ட் பிளிட்ஸ் பொழுதுபோக்கு
- வாகீசன் ரசாயா
- கிரிபாகர் ஜெய்.ஜே
- டின்சா

எழுத்தாளரும், பாடகருமான வாகீசன் ராசய்யாவுடன் இணைந்து, பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜெ.பி.லீலா ராம், ராஜு.கே, சரவணன்.பா, ரேகா.எல் தயாரித்துள்ள ஆல்பம், ‘தமிழ் கிறுக்கன்’. ஏஐ மூலம் உருவான காட்சிகளை கிரிபாகர் ஜெய்.ஜெ இயக்க, டின்சா எடிட்டிங் செய்துள்ளார். 5 பாடல்களும் தனித்தனி கருப்பொருளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
‘கிறுக்குத்தனம்’ என்பது குழப்பம் அல்ல; அது சுதந்திரமான மற்றும் மிகவும் ஆழமான மனித உணர்வுகளின் வெளிப்பாடு என்பதை ஆல்பம் வெளிப்படுத்துகிறது. முன்னதாக ‘காக்கும் வடிவேல்’ என்ற தமிழ் இன்டிபென்டெண்ட் சிங்கிள், ‘மெஜந்தா’ திரைப்படம் ஆகியவற்றுக்கு பிறகு உருவான ‘தமிழ் கிறுக்கன்’, பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மெண்டின் 3வது முயற்சியாகும்.

