- சென்னை
- 18 வது எடிசன் விருது விழா
- நந்தம்பாக்கம் வர்த்தக நிலையம்
- Radaravi
- டாக்டர்
- சி. எம். கே ரெட்டி
- விக்ரமன்
- நண்டு ஜெகன்
- அம்பிகா
- ஸ்டண்ட் சில்வா
- அந்தோனி தாசன்
- தமிழ் வாழ்க்கை கட்சி
- வேல்முருகன்
- செல்வகுமார்
- விக்ரமன்
- எடிசன் விருதுகள்
சென்னை: திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் விதமாக, வரும் 24ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 18வது எடிசன் விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் ராதாரவி, டாக்டர் சி.எம்.கே ரெட்டி, இயக்குனர் விக்ரமன், நண்டு ஜெகன், அம்பிகா, ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா, பாடகர் அந்தோணி தாசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், செல்வகுமார் கலந்துகொண்டனர்.
விக்ரமன் பேசுகையில், ‘எடிசன் விருதுகள் விழாவில் கலந்துகொள்வது பெருமையான விஷயம். எனது மகன் கனிஷ்கா, ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தில் நடித்ததற்காக, சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வென்றான். அடுத்து அவன் நடிக்கும் படத்துக்காக, சிறந்த நடிகருக்கான எடிசன் விருது வெல்ல வேண்டும்’ என்றார். சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இணையதளத்தில் பொதுமக்கள் வாக்களிப்பதன் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
