- யூனியன் அரசு
- புது தில்லி
- தாதா லாரன்ஸ் பிஷ்னோய்
- பஞ்சாப்
- குஜராத்
- லாரன்ஸ் பிஷ்னோய்
- சிது மூசேவலா
- சல்மான் கான்
- மகாராஷ்டிரா
- பாபா சித்திக்
புதுடெல்லி: பஞ்சாப்பை சேர்ந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு, பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கிறார். தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றாலும், அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளின் மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பாடகர் சித்து மூஸ்வாலாவின் படுகொலை, சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, சல்மான்கானின் நண்பரும் மற்றும் மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகளில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை சம்பவங்களை தழுவி, ‘லாரன்ஸ் ஆஃப் பஞ்சாப்’ என்ற வெப்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜீ5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தொடரின் உள்ளடக்கத்தில் குற்றச்செயல்களை பெருமைப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், சர்ச்சைக்குரிய வெப்தொடரை வெளியிட வேண்டாம் என்று ஜீ5 ஓடிடி தளத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியது. இதையடுத்து வெப்தொடரின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
