கவர்ச்சி காட்சிகளை நீக்க கியாரா வற்புறுத்தல்

பெங்களூரு: பாலிவுட் முன்னணி நடிகை கியாரா அத்வானி, தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்த ‘கேம் சேஞ்சர்’ என்ற படம் தோல்வி அடைந்தது. பிறகு இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ‘வார் 2’ என்ற இந்தி படமும் தோல்வி அடைந்தது. இதனால் நிலைகுலைந்த கியாரா அத்வானி, தற்போது மலையாள நடிகை கீது மோகன்தாஸ் எழுதி இயக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் யஷ்ஷுடன் இணைந்து நடித்துள்ளார். தவிர நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

இப்படத்தில் கியாரா அத்வானி தோன்றிய சில காட்சிகள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், யஷ்ஷுடன் இணைந்து அவர் நடித்த நெருக்கமான காட்சிகள் வைரலானதை தொடர்ந்து, அவரை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனவே, தனது கிளாமர் காட்சிகளை படத்தில் இருந்து நீக்க கீது மோகன்தாஸுக்கு கியாரா அத்வானி அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிக்கும்போது அவருக்கு தர்மசங்கடம் ஏற்படவில்லை என்றாலும், கிளிம்ப்ஸை பார்க்கும்போது நெருடலாக இருப்பதுடன், படம் வெளியான பிறகு தனது இமேஜ் கடுமையாக பாதிக்கும் என்று அவர் நினைக்கிறார். அக்காட்சிகள் குடும்ப ரீதியாக பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால், கீது மோகன்தாஸிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் சொல்வதை கேட்டு சில காட்சிகளை நீக்கினால், கதையின் ஓட்டத்துக்கு தடங்கல் ஏற்படுமோ என்று தயங்கும் கீது மோகன்தாஸ், இதுவரை கியாரா அத்வானிக்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்.

Related Stories: