- காளி வெங்கட்
- சரத்பாபு
- சூர்யா தேவி
- பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட்
- சினிமா டூர் பொழுதுபோக்கு
- விஜய் கார்த்திகேயன்
- ரேஷ்மா முரலிதரன்
- ஜென்சன் திவாகர்
- ஆடுகளம்
- நாராயன்
- மைம் கோபி
- ஜெயப்பிரகாஷ்
- விஜய் பார்வதி
- வினோதினி வைத்தியநாதன்
- தினேஷ் குமார்
- ஜென் மார்ட்டின்
- விவேக்
- கார்த்திக் நேதா
- சாரதி
- உமாதேவி
குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. பி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், சினிமா டூர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சரத்பாபு, சூர்யா தேவி தயாரிக்கின்றனர். பா.விஜய் கார்த்திகேயன் எழுதி இயக்குகிறார். காளி வெங்கட், ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, ஜெயப்பிரகாஷ், விஜே பார்வதி, வினோதினி வைத்தியநாதன், சரத்பாபு நடிக்கின்றனர்.
தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். விவேக், கார்த்திக் நேத்தா, சாரதி, உமாதேவி பாடல்கள் எழுதுகின்றனர். சக்தி திரு எடிட்டிங் செய்ய, ஹாசினி அரங்கம் அமைக்கிறார். ராம்போ விமல் சண்டைப்பயிற்சி அளிக்க, ராதிகா நடனக்காட்சி அமைக்கிறார்.
கடந்த 1995களில் அரசு பள்ளியில் படிக்கும் தனது மகனை, தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் தந்தையின் கதையை மையப்படுத்தி, குடும்ப உணர்வுகளுக்கு மதிப்பளித்து படம் உருவாகிறது. சிவகங்கையில் படப்பிடிப்பு நடக்கிறது. டி.வி நடன நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான ரேஷ்மா முரளிதரன், 2016ல் ‘மிஸ் மெட்ராஸ்’ போட்டியில் 3வது இடத்தை பிடித்திருந்தார். பிறகு டி.வி தொடர்களில் நடித்த அவர், 2021ல் டி.வி நடிகர் மதன் பாண்டியனை காதலித்து திருமணம் செய்தார்.
