தனுஷ் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘ஏன்… நானெல்லாம் போயஸ் கார்டனில் ஒரு வீடு வாங்கக்கூடாதா?’ என்று ஆதங்கப்பட்டார். அதை வைத்து நெட்டிசன்களும், சில ஹீரோக்களின் ரசிகர்களும் அவரை கிண்டல் செய்தனர். இந்நிலையில், ‘கர’ படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷிடம், அந்த மீம்கள் குறித்து ஆர்ஜேவும், நடிகருமான விஜய் ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த தனுஷ், ‘அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. நான் ஏர்போர்ட்டுக்கு செல்லும்போது ஒரு பஸ் டிரைவர், என்னிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டார். போட்டோ எடுத்த பிறகு அவர், ‘தம்பி, நான் யாரிடமும் செல்ஃபி எடுத்தது இல்லை. உங்களுடன்தான் முதல்முறையாக எடுத்திருக்கிறேன்.
போயஸ் கார்டன் வீடு பற்றி நீங்கள் பேசியது என் மகனுக்கு மோட்டிவேஷனாக இருக்கிறது. அவன் இன்ஸ்ஃபயராகி சின்சியராக பணியாற்றுகிறான்’ என்றார். ஸோ, இதை ஒரு இன்ஸ்பிரஷேனாக எடுத்துக்கொள்ளலாம். மீம்களுக்கு மெட்டீரியலாக மாறினாலும் அது எண்டர்டெயின்மெண்ட்தான். அதுதானே நம் வேலை? எல்லாமே எனக்கு ஓ.கே. ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியம்’ என்றார்.
