×

காதல் மனைவியுடன் சர்வானந்த் விவாகரத்து

தமிழில் ‘நாளை நமதே’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘கணம்’, ‘பைக்கர்’ ஆகிய படங்களில் நடித்தவர், தெலுங்கு நடிகர் சர்வானந்த். கடந்த 2023ல் தனது காதலி ரக்‌ஷிதா ரெட்டியை இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். 2024ல் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சர்வானந்த், ரக்‌ஷிதா ரெட்டிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியானது.

இருவீட்டு பெற்றோரும் பெண் குழந்தையை காரணம் காட்டி, சர்வானந்துடன் ரக்‌ஷிதா ரெட்டியை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தனது விவாகரத்தை உறுதி செய்யும் விதமாக சர்வானந்த், தனது சமூக வலைத்தளத்தில் இருந்த அனைத்து திருமண போட்டோக்களையும் நீக்கியுள்ளார். ஆனால், சர்வானந்த் இன்னும் ரக்‌ஷிதா ரெட்டியை விவாகரத்து செய்யவில்லை என்றும், அவர்களுக்குள் சில தனிப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால், ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சர்வானந்த் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Tags : Sarvanand ,Rakshita Reddy ,
× RELATED அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா இணையும் பேட்டில்