‘வாழ 3’ படத்தை அறிவித்த இயக்குனர்

மலையாளத்தில் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’, ‘குருவாயூர் அம்பலநடையில்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமான விபின் தாஸ் கதாசிரியராக பணியாற்றிய ‘வாழ: பயோபிக் ஆஃப் பில்லியன் பாய்ஸ்’ என்ற படம், கடந்த 2024ல் திரைக்கு வந்து வெற்றிபெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதை பிரான்சைஸாகவும் மாற்றினார்கள். கடந்த ஏப்ரல் 2ம் தேதி ‘வாழ 2: பயோபிக் ஆஃப் பில்லியன் ப்ரோஸ்’ என்ற படம் வெளியானது. இப்படத்துக்கும் விபின் தாஸ் கதை எழுதினார்.

2ம் பாகம் வெளியான சில நாட்களிலேயே வசூலை அள்ளி, மலையாளத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றது. ‘வாழ’ படத்தின் பிரான்சைஸில் முன்னணி நடிகர், நடிகைகள் இல்லாமல் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது. தற்போது 3ம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2ம் பாகத்தை, விபின் தாஸின் உதவியாளர் சவின் இயக்கியிருந்தார். 3ம் பாகத்தை விபின் தாஸின் உதவியாளர் விஸ்வன் ஜித் இயக்குகிறார். முதல் 2 பாகங்களில் ஆண்களை மையப்படுத்தி கதை நகர்ந்தது.

3ம் பாகத்தில் பெண்களை மையப்படுத்தி கதை எழுதப்பட்டு, ‘வாழ 3: பயோபிக் ஆஃப் எ பில்லியன் கேர்ள்ஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். ‘வாழ’ பிரான்சைஸ் படங்களின் கதாசிரியர் விபின் தாஸ் கூறுகையில், ‘இப்படத்தின் தொடர் நாங்கள் நினைத்ததை விட பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. தொடர்ந்து புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்துவோம்’ என்றார்.

Related Stories: