×

அடர்ந்த காடுகளில் படமான ‘அறுவடை’

எம்.கே பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் சார்பில் ‘லாரா’ எம்.கார்த்திகேசன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம், ‘அறுவடை’. பிரேம் குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, ரகு ஸ்ரவன் குமார் இசை அமைக்க, கே.கே.விக்னேஷ் எடிட்டிங் செய்துள்ளார். ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற கருத்துடன் படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே ‘லாரா’ என்ற படத்தை தயாரித்து போலீஸ் கேரக்டரில் நடித்த எம்.கார்த்திகேசன், பிறகு ‘ஒண்டிமுனி’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

‘அறுவடை’ படம் குறித்து அவர் கூறுகையில், ‘இதில் ஹீரோயினாக நடித்துள்ள சிம்ரன் ராஜ், ரிலீசுக்கு பிறகு தமிழில் பிசியாகி விடுவார். வாகனம் செல்ல முடியாத அடர்த்தியான காடுகளுக்கு உள்புறம் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். பல்வேறு சிரமங்களையும் பொருட்படுத்தாமல் அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். மாறுபட்ட கேரக்டர்களில் கஜராஜ், ‘பருத்திவீரன்’ சரவணன், ராஜசிம்மன், பாபுஸ் பாபுராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது’ என்றார்.

Tags : M. Karthikesan ,MK Film Media Works P.Lit ,Prem Kumar Murugesan ,Raghu Sravan Kumar ,KK Vignesh ,Vini Vaidyathavan ,Vini Aruppan ,
× RELATED இயகுனர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” பட டிரெய்லர் !!