- விக்னேஷ் சிவன்
- சென்னை
- பிரதீப் ரங்கநாதன்
- கிருத்தி ஷெட்டி
- சீமான்
- சஜே சூர்யா
- கௌரி கிஷன்
- ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
சென்னை: பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் நடிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி வெளியான படம், ‘எல்ஐகே’ என்கிற ‘லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் பேசியது: படத்தை பலர் பாராட்டினாலும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. புதிதாக ஒரு விஷயத்தை சொல்லும்போது, அது சிலருக்கு உடனே பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக, கமென்ட் செய்து படத்தை காலி செய்துவிடாதீர்கள் என்று மீடியா, ஊடகம், இன்புளூயன்ஸர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களை கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் பாராட்டுங்கள். பிடிக்கவில்லை என்றால், தனியாக என்னிடம் சொல்லி திட்டுங்கள் அல்லது எனக்கு போன் செய்து பேசுங்கள்.
என் கையில் இருந்த பணத்தை எல்லாம் இந்த படத்துக்காக செலவு செய்துவிட்டேன். படத்தில் பணியாற்றிய நிறைய பேருக்கு செட்டில்மெண்ட் பாக்கி இருக்கிறது. தங்கள் பணம் கிடைத்துவிடும் என்று பலர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இந்த வாரம் படம் நன்றாக ஓட வேண்டும். இல்லை என்றால், ஊஊஊதான். சிம்பிளாக படம் இயக்கினால், ‘ஒரேமாதிரி செய்கிறேன்’ என்று விமர்சிக்கிறீர்கள். புதிதாக யோசித்து செய்தால், அதில் குறை சொல்கிறீர்கள். நான் கேசரி கிண்டினால் மட்டும், ‘ஏன் காரமாக இல்லை?’ என்று கேட்கிறீர்கள். எனது சிக்கன் குழம்பை மட்டும், ‘ஏன் இனிப்பாக இல்லை?’ என்று கேட்கிறீர்கள். ‘எல்ஐகே’ படத்துக்குள் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருக்கிறது. இதுதான் எனக்கு வரும். மற்றபடி பயங்கரமான படம் எல்லாம் எனக்கு இயக்க தெரியாது.
