- முதல் அமைச்சர்
- மேகாதட்டு அணை
- அமைச்சர்
- செங்கோட்டையன்
- ஈரோடு
- வருவாய் அமைச்சர்
- கைமுத்து
- விஜய் பாலாஜி
- திண்டல்
- ஈரோடு மாவட்டம்
- மேகதாது
- அணை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே நடைபெற்ற நாட்டு மாடு கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ‘‘மேகதாது விவகாரம் குறித்து முதல்வர் வாய் திறக்காதது ஏன்?’’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு செங்கோட்டையன், ‘‘மேகதாது விவகாரம் குறித்து முதல்வர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருவதால் வாய் திறப்பதில்லை. தமிழக மக்களின் ஜீவாதார பிரச்னையை தீர்க்கும் வகையில் தமிழக முதல்வரின் குரல் உள்ளது. தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது.’’ என்றார். ‘‘வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் வினோத் திருப்பதி கோயிலில் வைத்து பூஜை செய்தது சர்ச்சையாகி உள்ளதே’’ என்று கேட்டதற்கு, ‘‘வேளாண் பட்ஜெட் வரைவு நகலை வேளாண்மை துறை அமைச்சர் திருப்பதி கோயிலில் வைத்து பூஜை செய்ததற்கு ஆதாரம் உள்ளதா?
இதற்கு எதாவது ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். ’’ என்றார். ‘‘மகளிர் உதவித்தொகை 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும்’’ என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘தேர்தல் அறிக்கை அறிவித்த பிறகு அடுத்த நாளே அமல்படுத்துவது வழக்கம் அல்ல. நிதிநிலைக்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்கும். படிப்படியாக திட்டங்களை அமல்படுத்துவோம்’’ என்றார்.
