×

முட்டை விலை தொடர் சரிவு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டத்தில், முட்டை விலையில் 30 காசுகள் குறைத்து, 570 காசில் இருந்து 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஆடி மாத கோயில் திருவிழா மற்றும் வடமாநிலங்களில் துர்கா பூஜையின் எதிரொலியாக, முட்டை விற்பனை குறைந்துள்ளதால் விலையும் குறைந்து வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களில் முட்டை விலை 140 காசுகள் வரை குறைந்துள்ளது.

Tags : Namakkal ,National Egg ,Coordination ,Committee ,
× RELATED பதிவாளர் நியமனத்துக்கு ரூ.50 லட்சம் லஞ்சமா? பதிலளிக்காமல் அமைச்சர் ஓட்டம்