உடன்குடி, ஆக. 1: உடன்குடி பெருமாள்புரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(65), நகைத்தொழில் செய்து வருகிறார். இங்குள்ள உச்சினிமகாளி அம்பாள்-ஸ்ரீபட்டறை அம்பாள்கோயில் கமிட்டி தலைவராகவும் உள்ளார். இக்கோயில் பகுதியில் காலியிடத்தை பயன்படுத்துவது சம்பந்தமாக ஊர் மக்களுக்கும், நடிகர் ஜிபி முத்துவுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.
கடந்த 19ம் தேதி கோயில் கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நடிகர் ஜிபி முத்துவுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொம்மைகள் வைத்து மாந்திரீக பூஜை செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு நடிகர் ஜிபி முத்து வைரலாக்கினார். இதுகுறித்து கோயில் நிர்வாகி பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் எஸ்ஐ முகேஷ்அரவிந்த், நடிகர் ஜிபி முத்து மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
