×

கல்லூரி முதல்வர் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி ஆணையர் அறிவிப்பு

 

சென்னை: கல்லூரி கல்வி ஆணையர் பொன்னையா அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: அரசு கல்லூரிகளில் (கலை அறிவியல் மற்றும் கல்வியியல்) பணியாற்றும் தகுதிவாய்ந்த மூத்த இணை பேராசிரியர்களுக்கு கிரேடு-2 அந்தஸ்து பெற்ற கல்லூரிகளிகளின் முதல்வர்களாக பதவி உயர்வு அளிக்கும் வகையில் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் 100 பேருக்கு முதல்வர்களாக பதவி உயர்வு வழங்கப்படும். இதற்கான விருப்ப இடத்தை தேர்வுசெய்வதற்கு கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. இதற்கு தகுதிவாய்ந்த இணை பேராசிரியர்கள் https://www.promotion.dcetransfer.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 31ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் அறிவுறுத்த வேண்டும்.

Tags : Chennai ,Ponnaia ,
× RELATED நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில்...