×

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்; முதல்வர் வாழ்த்து

 

சென்னை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக ‘அவ்வை இல்லம்’, புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக ‘அடையாறு புற்றுநோய் நிலையம்’ போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தை திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார். அவரது உயரிய லட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளை கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்!. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags : Dr. ,Muthulakshmi Reddy ,Chief Minister ,Chennai ,Vijay ,Tamil Nadu ,Madras Provincial Legislative Assembly ,
× RELATED நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில்...