×

முதல் டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்னில் ஆல் அவுட்: பாகிஸ்தானுக்கு 211 ரன்கள் இலக்கு

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா அரங்கில் கடந்த 25ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது.

3ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஷா மசூத் சதம் அடித்து 109 ரன்னில் ஆட்டமிழந்தார். 80.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகபந்து வீச்சாளர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட் எடுத்தார். 29 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்து 155 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

4ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வெஸ்ஸ் இண்டீஸ் அணி கூடுதலாக 55 ரன்கள் சேர்த்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சமர் ஜோசப் 38 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 5 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 210 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

* 5 ஓவர், மெய்டன், விக்கெட்
முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஜஸ்டின் கிரீவ்ஸ் மொத்தம் 11 ஓவர் வீசிய 6 மெய்டன் 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். இதில், 64, 66, 68, 70, 72 ஆகிய ஓவர்களை வீசிய கிரீவ்ஸ், ரன் ஏதுவும் கொடுக்காமல் மெய்டன் எடுத்து ஒவ்வொரு ஓவர்களிலும் ஒரு விக்கெட்டை எடுத்து வரலாற்று சாதனை படைத்து உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 ஓவர்கள் வீசி, 5 ஓவர்களும் மெய்டனுடன் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Tags : West Indies ,Pakistan ,Trinidad ,Brian Lara Arena ,Taroba ,West ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெனீவாவில் நடைபெறும் என ஃபிடே அறிவிப்பு !