×

உலகக்கோப்பையின் சிறந்த கோல் எது தெரியுமா?

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் முதல் முறையாக பங்கேற்ற குட்டி தீவு நாடான கேப் வெர்டே ஜாம்பவான் அணிகளான அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகளுக்கு தண்ணி காட்டியது.

இந்த அணியின் கோல் கீப்பர் வோசின்ஹா பல கோல்களை தடுத்து உலக முழுவதும் பிரபலமடைந்தார். இந்த அணியின் சிறப்பான ஆட்டத்தை உலக முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் கேப் வெர்டே அணியின் வீரர் சிட்னி லோபஸ் கப்ரால் அடித்த கோல், ரசிகர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த உலகக்கோப்பையின் சிறந்த கோலாக பிபா அறிவித்து உள்ளது.

Tags : World Cup ,Spain ,Argentina ,2026 World Cup ,Cape Verde ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெனீவாவில் நடைபெறும் என ஃபிடே அறிவிப்பு !