திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதிவரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா மிக கோலாகலமாக நடைபெறுகிறது. இவ்விழாவின்போது, வரும் 6ம் தேதி ஆடிக்கிருத்திகை தினத்தன்று சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் செலுத்தி, முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்யவிருக்கின்றனர்.
திருத்தணி மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை திருக்குளத்தில் ஆடிக்கிருத்திகை தினத்தன்று மாலை முதல் 3 நாட்களுக்கு தெப்பத் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெறுகிறது. இத்தெப்ப திருவிழாவை முன்னிட்டு, சரவண பொய்கை திருக்குளத்தில் கடந்த 3 நாட்களாக 50க்கும் மேற்பட்ட பர்வதராஜகுல மரபை சேர்ந்தவர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் சரவணபொய்கை குளத்தில் தெப்பம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.
