அஸ்ஸாம் வெள்ளப் பேரழிவு: நிரந்தரப் பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்பை உருவாக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: அஸ்ஸாமில் அறிவியல் பூர்வமான தடுப்பு நடவடிக்கைகள், மேற்கொள்ள வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்;

அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் பேரிடரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுடன் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை வழங்குவதில் மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை ஏற்படுத்துவதோடு, பல குடும்பங்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கிறது.

வெள்ளப் பாதிப்புகளைக் கையாள்வதற்கு ஒரு வலுவான மற்றும் நிலையான அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இது. அதாவது, பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு அறிவியல் பூர்வமாக முன்னுரிமை அளிக்கும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்; அப்போதுதான் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய துயரங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related Stories: