பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மக்கள் எதிர்ப்பை மீறி கோமங்கலம் சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி கோமங்கலம் சுங்கச்சாவடி இன்று காலை திறக்கப்பட்டது. உள்ளூர் மக்களுக்கும் கட்டாய சுங்கக் கட்டணம் என தெரிவித்ததால் கடும் எதிர்ப்பு எழுந்தது. மக்கள் எதிர்ப்பு காரணமாக 3 முறை சுங்கச்சாவடி திறப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் திறக்கப்பட்டது. கோமங்கலத்தில் சுங்கச்சாவடி திறக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
