×

குஜராத் வெள்ளத்தில் மூழ்கிய 50 கார்கள்

வல்சாத்: குஜராத் வெள்ளத்தில் 50 கார்கள் மூழ்கிய வீடியோ வைரலாகி உள்ளது. குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது; இதில் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள வல்சாத் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வல்சாத்தின் உம்பர்கான் பகுதியில் நேற்று காலை வரை வெறும் 16 மணி நேரத்தில் 1,100 மி.மீ என்ற முன்னெப்போதும் இல்லாத அளவு மழை பதிவாகியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தொடர் மழையால் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மற்றும் நீர் தேக்கம் ஏற்பட்ட நிலையில், வல்சாத்தின் வாபி பகுதியிலிருந்து பல கார்கள் நீரில் மூழ்கியிருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவில், வாகன நிறுத்துமிடம் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காண முடிகிறது. அங்கு 50க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

Tags : Gujarat ,Valsad ,Valsad district ,Umbargaon ,
× RELATED வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு...