தெலங்கானாவில் பரபரப்பு நிர்வாணமாக குளத்தில் குதித்து ஐடி பெண் ஊழியர் தற்கொலை

*கெட்ட கனவுகளால் இறந்தாரா? என போலீஸ் விசாரணை

திருமலை : குளத்தில் நிர்வாணமாக குதித்து தற்கொலை செய்து கொண்ட ஐடி பெண் ஊழியரின் சடலம் மீட்கப்பட்டது. அவர் கெட்ட கனவுகளால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம், பீர்ஜாடிகுடாவை சேர்ந்தவர் தேஜஸ்வினி, சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 18ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிய அவர் திடீரென தனது ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக அங்குள்ள கோயிலுக்குள் சென்றுள்ளார். அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துக்கொண்டு அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நேற்று முன்தினம் தகவலறிந்த போலீசார், கோயிலில் உள்ள கேமராவை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண் தேஜஸ்வினி நிர்வாணமாக நடந்து சென்று குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தீயணைப்பு படையினர் உதவியுடன் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், சிறுவயதிலேயே தேஜஸ்வினியின் பெற்றோர் விவாகரத்து செய்துள்ளனர். இதனால் வாடகை வீட்டில் தனது தாயுடன் தேஜஸ்வினி வசித்து வந்தார். இரவில் அடிக்கடி கெட்ட கனவுகள் வருவதாக தாயிடம் கூறியுள்ளார். அவர் சமாதானம் கூறி வந்துள்ளார்.

மேலும் இவர்கள் குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ.1 லட்சமாம். அவர்கள் தங்கியிருந்த வீட்டு கட்டிடத்தின் மேல் 2 தளங்கள் உள்ளதாகவும், அங்கு சட்டவிரோதமாக தங்கும் விடுதியாக நடத்தப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. எனவே, இதற்கும் தேஜஸ்வினியின் மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் தேஜஸ்வினியின் தாய் அருணாவிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், சமீபத்தில் அவர்களின் வங்கி கணக்கில் பணபரிமாற்றம் நடந்துள்ளதா? எனவும், வாடகை வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ேதஜஸ்வினி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையில் கோயிலுக்குள் சென்று சிலையுடன் தேஜஸ்வினி, குளத்தில் குதித்த நிலையில், அவரது சடலம் மட்டுமே மீட்கப்பட்டது. சிலை கிடைக்கவில்லை. இந்த வழக்கில் அந்த சிலை ஒரு முக்கிய ஆதாரமாக அமையக்கூடும் என்பதால், பேரிடர் மீட்பு படையினர் படகு மூலம் குளத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: