உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38 ஆக அதிகரிக்க மசோதா: மக்களவையில் தாக்கல்

 

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தலைமை நீதிபதி உட்பட 34லிருந்து 38ஆக உயர்த்துவதற்காக ஒன்றிய அரசு அண்மையில் அவசரச் சட்டம் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், அந்த அவசர சட்டத்திற்கு மாற்று சட்ட வடிவம் கொடுக்கும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (எண்ணிக்கை) திருத்த மசோதா 2026 மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை அவையின் பரிசீலனைக்காகத் தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த மசோதா, இரு அவைகளிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். மேலும் சட்டப்பூர்வமாக இந்த எண்ணிக்கை உயர்த்தப்படுவதன் மூலம் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் முக்கிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: