வாஷிங்டன்: ரூ.96.4 லட்சம் மதிப்புக்கு அமெரிக்க பத்திரம் வாங்குவோருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டு திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் டாலர் பத்திரத்துக்கு அமெரிக்க கிரீன் கார்டு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு யோசனை செய்து வருகிறது. டிரம்ப்பின் திட்டம் அமலானால் அமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெறுவது மிக மிக செலவுமிக்கதாகிவிடும். அமெரிக்காவில் குடியேறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டத்தை அமல்படுத்த டிரம்ப் அரசு பரிசீலனை செய்து வருகிறது.
