கனடாவில் பயங்கரம் இந்திய லாரி ஓட்டுநர் கொலை: கால்வாயில் தூக்கி வீசியது அம்பலம்

ஒட்டாவா: கனடாவின் ஹாமில்டன் நகரில் இந்தியாவை சேர்ந்த 29 வயதான தரன்பிரீத்சிங் சித்து என்பவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். ஒட்டாவாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 500 கி.மீ தொலைவில் உள்ள ஹாமில்டனின் ஸ்டோனி கிரீக் பகுதியில், ஒரு வடிகால் பாதையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். 2022ல் இந்தியாவில் இருந்து கனடா சென்று அங்கு பிராம்ப்டனில் வசித்து வந்த அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்துவின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். ஒன்றுக்கும் மேற்பட்டோர் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரிக்கிறார் கள்.

Related Stories: