அரியலூர், ஜூலை 20: அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை ஜூலை 21ம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் கலந்துக் கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையலாம் என செயற்பொறியாளர் கலையரசி தெரிவித்துள்ளார்.
