- விளாத்திகுளம்
- திமுகா
- சட்டமன்ற உறுப்பினர்
- Markandeyan
- முதல் அமைச்சர்
- விஜய்
- தூத்துக்குடி
- திமுகா எம்.
- தூத்துக்குடி
- எல் ஏ அனிதா ராடகிருஷ்ணன்
தூத்துக்குடி: முதல்வர் விஜய் பற்றி விமர்சித்ததற்காக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை அவரது வீட்டுக்கு வந்து போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஏற்கனவே முதல்வர் விஜயை விமர்சித்ததாக திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் முன்னால் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் முதலைச்சர் விஜய் விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தவெக-வினர் புகார் அளித்ததை தொடர்ந்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் வீடு அமைந்துள்ள விளாத்திக்குளம் பகுதியில் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்து போலீசார் அழைத்துச்சென்றனர். தொடர்ந்து முதல்வரை விமர்சித்ததாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இணையத்தில் தவெக அரசு குறித்து பதிவிட்டாலும் பதிவிட்டவர்களை கைது செய்யக் கூடிய நிகழ்வு வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பது விளாத்திக்குளம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
