×

ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 28 பேர் பரிதாப பலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மற்றும் ராஜௌரி ஆகிய மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏழு பேர் மாயமாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சில நிமிடங்களிலேயே, பெருக்கெடுத்த ஆறுகள் கரைபுரண்டு ஓடி, தாழ்வான பகுதிகளை மூழ்கடித்தது. இந்த வெள்ளத்தில் புதிய பேருந்து நிலையம் பலத்த சேதமடைந்தது. மேலும் பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் காணாமல் போன ஒரு பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள தர்ஹாலி, கண்ட்லி, சுக்தோ மற்றும் ஜமோலா ஆகிய அனைத்து முக்கிய ஆறுகளும் பெருக்கெடுத்து ஓடி, அபாயக் குறியீட்டிற்கு அருகிலோ அல்லது அதற்கு மேலேயோ அபாயகரமாகப் பாய்ந்தன. இந்தப் பெருவெள்ளம் தெருக்களைப் பெருவெள்ளமாக மாற்றியது. இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஜூலை 23 வரை மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதோடு, நிலைமையைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகளையும் அமைத்துள்ளனர்.

நாகாலாந்து;
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர்உயிரிழந்தனர். இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவினால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவுக்குப் பிறகு அந்தப் பகுதியில் அதிகளவில் தண்ணீர் புகுந்து வருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. தற்போது சம்பவ இடத்தில் தன்னார்வலர்கள், காவல் துறை, ராணுவத்தினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவு துயர சம்பவத்திற்கு நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 74,000-மும் உடனடி நிவாரணமாக அவர் அறிவித்துள்ளார்.

Tags : Jammu and ,Kashmir ,Nagaland ,Jammu ,Punch ,Rajauri ,
× RELATED ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர...