×

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது; எத்தனை வழக்கு போட்டாலும் சந்திப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நாட்டுக்காக சிறை சென்றவர்கள்தான் திமுகவினர். ஜனநாயக நாட்டில் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. தவெக ஆட்சிக்கு சகிப்புத்தன்மையே இல்லை.

மற்ற கட்சி எம்எல்ஏக்கள் தவெகவில் இணைகின்றனர்; திமுக எம்எல்ஏக்களை மாற்ற முடியாததால் கைது செய்கின்றனர். துன்புறுத்த வேண்டும், மனஉளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்பதாலேயே மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. அவதூறாக பேசினால் வழக்கு போடுங்கள், நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம். திமுகவினர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் சந்திப்போம் என்று கூறினார்.

Tags : R. S. ,Bharati ,Chennai ,Vlathikulam ,M. L. A. ,Markandeyan ,M. Secretary ,R. S. Bharati ,Dweka ,
× RELATED ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர...