×

இளம்பெண்ணை தாக்கிய கணவர், மாமனார் கைது

 

பெரம்பூர், ஜூலை 20: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி (26). இவரது கணவர் ராஜேஷ் (29). கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரிந்து ராஜேஷ் தனது மனைவி கீதாஞ்சலிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி இரவு 9 மணி அளவில் கீதாஞ்சலிக்கும் ராஜேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜேஷின் தந்தை குணசேகரன் கீதாஞ்சலி வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டபோது, தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

தன்னை கணவர் மற்றும் மாமனார் தாக்கியதாக கீதாஞ்சலி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று முன்தினம் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (27) மற்றும் அவரது தந்தை குணசேகரன் (59) என இருவரையும் கைது செய்தனர். பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags : Perambur ,Geetanjali ,Erukancheri ,Kodungaiyur ,Rajesh ,
× RELATED சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில்...