மதுரவாயல் மேம்பாலம் அருகே காயம் அடைந்த மயில் மீட்பு

 

 

பூந்தமல்லி, ஜூலை 20: மதுரவாயல் மேம்பாலம் அருகே காயம் அடைந்த நிலையில் கிடந்த மயிலை போலீசார் மீட்டு, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மதுரவாயல் மேம்பாலம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த இடத்தில் கட்டமான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இந்த இடத்தில் மயில் ஒன்று காயமடைந்த நிலையில் கிடந்தது. இதனை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வானகரம் போலீசார், அந்த மயிலைப் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து மயிலை மீட்டனர். உடனடியாக காயம் அடைந்த மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதனைத் தங்களது கண்காணிப்பில் மீட்டுச் சென்றனர். தொடர்ந்து அந்த மயிலுக்கு சிகிச்சை அளித்து அதன் பின்பு வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

Related Stories: