×

முத்துப்பேட்டை அரசுப்பள்ளி ஆசிரியர் தொலைதூர சைக்கிள் ஓட்டும் போட்டியில் சாதனை

திருவாரூர்: முத்துப்பேட்டை அரசுப்பள்ளி ஆசிரியர் தொலைதூர சைக்கிள் ஓட்டும் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வா.சுரேஷ் என்பவர் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவருகிறார். இவர் பெங்களுரில் நடைபெற்ற 1,200 கிமீ க்கான தொலைதூர சைக்கிள் ஓட்டும் போட்டியில் பங்குபெற்று 89மணிநேரம் 45நிமிடங்களில் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.

ஆசிரியர் வா.சுரேசை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆசிரியர் வா.சுரேஷ் இதுபோன்று பல்வேறு தொலைதூர சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Muthuppettai State School ,Thiruvarur ,Muthuppettai Government School ,Muthuppettai Union Kallikudi Uratchya Union Neutral School ,Thiruvarur District ,Suresh ,Bengaluru ,
× RELATED ராமநாதபுரத்தில் பிரபல நடிகை தர்ணா போராட்டம்