முட்டை விலை தொடர்ந்து உயர்வது குறித்து கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். வெயில் தாக்கம் அதிகரிப்பால் முட்டை உற்பத்தி 15% குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம். கோழித்தீவன மூலப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதும் முட்டை விலை உயர்வுக்கு காரணம். முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக அதன் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக சிங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
