பாலக்காடு, ஜூலை 16: கொல்லங்கோடு தபால் நிலையத்திற்கு பார்சல் வழியாக கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி மேகாலாயவிலிருந்து 7.3 கிலோ கிராம் கஞ்சா பார்சல் வழியாக பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கொல்லங்கோட்டை சேர்ந்த சஞ்சய், ராகுல், கொல்லங்கோடு திராமணியை சேர்ந்த பாபுவின் மகன் ஜிஜிட் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் ஷிபி (எ) கிருஷ்ணன்குட்டி (47), கவிதா (37) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான கவிதா ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஜிஜிட்டின் சித்தி ஆவார். அவரது மாமா ஷிபி என்பது விசாரணையில் தெரியவந்தது.
