×

மா மரங்களை அடியோடு வெட்டி வீசும் விவசாயிகள்

 

போச்சம்பள்ளி, ஜூலை 15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விளைச்சலில், போச்சம்பள்ளி தாலுகா 2ம் இடம் வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகாளக, மா மரங்களில் கோடை வெயிலின் தாக்குதல், சூறவளி காற்று, ஆலங்கட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்கனால் சுமார் 50 டன் மாங்காய்கள் உதிர்ந்து நாசமானது. இந்நிலையில், மீதம் உள்ள மாங்காய்களை வாங்க வியாபாரிகள் முன் வரததால், கடந்த ஒரு மாதமாக மாந்தோப்புகளில் மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்த்து, பழுத்து கீழே விழுந்து வருகிறது. இதனால், அவர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்வாதாரத்தை காக்க மா விவசாயிகள் மா மரங்களை வெட்டி அழித்து விட்டு, மாற்று பயிர் செய்து வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, சாமல்பட்டி, குன்னத்தூர், கொடமாண்டப்பட்டி, போச்சம்பள்ளி, தாதம்பட்டி, புலியூர், ஒலப்பட்டி, சந்தூர் வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான மா மரங்களை வளர்த்து வருகிறார்கள். இங்கு குறிபப்பாக மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, பீத்தர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மா ரகங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இவற்றில் தோத்தாபுரி ரகம், 60 சதவீதம் செந்தூரா மற்றுட் நீலம் ரகங்கள் 30 சதவீதமும், அல்போன்ஸா 5 சதவீதமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பீத்தர், மல்கோவா, பங்கனப்பள்ளி, காலப்பட்டு போன்றவை 5 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, மழையின்மையால் மா விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மன முடைந்த விவசாயிகள், பல வருடங்களால் தங்கள் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த மா மரங்களை அடியோடு வெட்டி வீசி வருகிறார்கள். போச்சம்பள்ளி தாலுகாவில் தொடர்ந்து தினமும் மா மரங்களை அடியோடு வெடி சாய்த்து வருகிறார்கள். இது குறித்து மா விவசாயிகள் கூறியதாவது: கடந்த 100 வருடங்களுக்கு மேல் மா மரங்களை பராமரித்து வந்த நிலையில், போதிய விலை இன்றி மாங்காய்கள் குப்பையில் கொட்டிய நிலை இருந்து வந்தன.

இதனால் மனம் வெறுத்தே, நாங்கள் வளர்த்த மா மரங்களை வெட்டி அழித்து வருகிறோம். மா மரங்கள் பராமரிக்கும் பணிக்காக ஆண்டு தோறும் குறைந்த பட்சம், லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தும் எவ்வித பயனும் இல்லை. இதனால், தொடர்ந்து வருவாய் இழப்பு காரணமாக மா மரங்களை அழித்து வருகிறோம் என்றார். தமிழக அனைத்து பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவகுரு கூறுகையில், கடந்த சில வருடங்களாக வறட்சியால், மா விவசாயிகள் மா விவசாயிகள் வருவாய் இழந்து பொருளாதார நெருங்கடியை சந்தித்து வருகின்றனர். 60 வருடங்களாக பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா தோட்டங்களே இல்லாமல் போகும் நிலை உருவாகும் என்றனர்.

Tags : Pochampally ,Krishnagiri district ,
× RELATED வெளி மாநிலம் செல்லும் பட்டன்ரோஸ்