புதுடெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கல்வி அமர்வு முதல் ‘மும்மொழி வழிக்கொள்கை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை விதியால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பமும் மன உளைச்சலும் ஏற்படும். படிக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனை கண்டிப்பாக ஏற்க முடியாது.
குறிப்பாக ஒன்பதாம் வகுப்பில் திடீரென மேலும் இரண்டு கூடுதல் மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கூறுவது மாணவர்களின் கல்விச் சுமையை அநியாயமாக அதிகரிக்கும் செயல் ஆகும். ஒன்பதாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், அடுத்த ஆண்டே 10ம் வகுப்புப் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில், திடீரென கூடுதல் மொழிகளைப் படிக்கக் கட்டாயப்படுத்துவது கல்விச் சூழலில் மிகப்பெரிய குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும். இந்த பிரச்சனை என்பது முகவும் முக்கியத்துவம் என்பதாலும், மாணவர்களின் எதிர்காலம் கொண்டது என்பதால் மனுவை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கர்ப்பிணாத நாள் வழக்கறிஞ, இந்த உத்தரவை உடனடியாகப் பின்பற்றாத ஆசிரியர்கள் மீது பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி,” பணிநீக்க நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டால் எங்களிடம் வாருங்கள். நாங்கள் அந்த உத்தரவுகளுக்குத் தடை விதிப்போம்.
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது முக்கிய கடமையாகும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் வாதிட்ட மனுதாரர்,” இந்த விவகாரத்தில் மத்திய அரசு பட்டியலிட்டுள்ள 22 மொழிகளில் வெறும் மூன்று மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் மட்டுமே தற்பொழுது கிடைக்கப் பெறுகின்றன. மீதமுள்ள 19 மொழிகளுக்கான புத்தகங்கள் இல்லை. திடீரென புதிய மொழிகளைக் கற்பிக்கப் போதிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களோ அல்லது மனிதவள உள்கட்டமைப்போ பள்ளிகளில் கிடையாது. குறிப்பாக 14 வயதான ஒரு 9-ஆம் வகுப்பு மாணவன், ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு படித்துக் கொண்டிருக்கும் சூழலில், திடீரென தமிழ் அல்லது மற்றொரு புதிய இந்திய மொழியைக் கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கல்வி அமர்வின் நடுப்பகுதியில் மாணவர்களுக்குக் கூடுதல் சுமையையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தயாரிப்பில் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
இந்தச் சுற்றறிக்கை இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது ஆகும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி ஜாய் மால்யா பாக்சி,இந்த அறிவிப்பானது இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என்ற அரசியலமைப்பு இலக்கை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. இதன் நோக்கம் மிகவும் தெளிவானது. இந்தியர்கள் ஆங்கிலத்தை ஒரு பூர்வீக இந்திய மொழியாகக் கருத முடியுமா?. ஒரு காலத்தில் இந்த நீதிமன்றத்தின் மொழியாகப் பார்சி மொழி இருந்தது, ஆனால் அது எட்டாவது அட்டவணையில் உள்ளதா?” என்று குறிப்பிட்டு, இந்திய மொழிகளைக் கற்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி,” இந்த விவகாரம் குறித்துப் பதிலளிக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என்று நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். இருப்பினும், வழக்கின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள் சிபிஎஸ்இ வாரியம் தங்களது பதிலை விரைந்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 10 நாட்களுக்குப் பிறகு, அதாவது வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
