- தேர்தல் ஆணையம்
- ஐயா
- காங்கிரஸ்
- புது தில்லி
- பொதுச்செயலர்
- ஜெய்ராம் ரமேஷ்
- பொது இயக்குனர்
- இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம்
- ஆர்.எஸ். ஷர்மா
புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், மக்களிடம் குடியுரிமையை நிரூபிக்கும்படி கேட்பது அரசின் தோல்வி என இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் ஆர்.எஸ்.சர்மா எழுதிய கட்டுரையை பகிர்ந்துள்ளார். அத்துடன், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பின்னணியை கொண்ட மிக சிறந்த அரசு முன்னாள் அதிகாரி ஒருவரால் எழுதப்பட்ட சக்தி வாய்ந்த மற்றும் துணிச்சலான கட்டுரை இது.
தேர்தல் ஆணையம் குழப்பத்தையும், சீர்குலைவையும் ஏற்படுத்தி உள்ளது. இதிலிருந்து யாரும் தப்பவில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு யாரும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், தேர்தல் ஆணையம் அந்த முழு செயல்முறைகளையும் நிர்வகிக்கும், ஒருங்கிணைக்கும் மற்றும் தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கும் விதத்தையே எதிர்க்கிறோம்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
