- முதல் அமைச்சர்
- கம்யூனிஸ்ட்
- மாநில செயலாளர்
- தர்மபுரி
- நிலை
- எம். வீரபாண்டியன்
- ஈரான்
- மோடி
- அமெரிக்கா
- சட்டப்பேரவை
- கரூர்
தர்மபுரி: தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று அளித்த பேட்டி: ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக பிரதமர் மோடி குரல் கொடுக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். வாக்குகளை வாங்குவதும், விற்பதும் குற்றம். வாக்கு மை காய்வதற்குள் ராஜினாமா செய்வதும் அது போலத்தான்.
முதல்வர் புதியவர். அவரிடமிருந்து அதிகமான திட்டங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரிடமிருந்து எந்த ஒரு உடல்மொழியோ அல்லது இது போன்று வாய்மொழியையோ எதிர்பார்க்கவில்லை. லஞ்சம் கூடாது என்பது நல்லது தான். தவெக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
கடந்த ஆட்சி கால நலத்திட்டங்கள் தொடர வேண்டும். இவ்வாறு வீரபாண்டியன் கூறினார். பாஜவை எதிர்க்க திமுக- தவெக இணைய வேண்டும் என்று திருமாவளவன், மாணிக்கம் தாகூர் பேசியது குறித்த கேள்விக்கு, கட்சிகள் வெற்றி பெறுவது, தோல்வியடைவது இயல்பு. ஆனால், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும் என்றார்.
