நெடுகுளா, ஜக்கனாரை ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

 

ஊட்டி, ஜூலை 10: கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நெடுகுளா மற்றும் ஜக்கனாரை ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நெடுகுளா ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சமையற்கூடம், சமையற்கூட இருப்பு அறை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நெடுகுளா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

Related Stories: