×

போக்சோ வழக்கில் கைதான ஒன்றிய அமைச்சர் மகனுக்கு ஜாமீன்: தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமலை: போக்சோ வழக்கில் கைதான ஒன்றிய அமைச்சர் மகனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பண்டி சஞ்சய் மகன் பண்டி பகீரத் கடந்த 25 நாட்களுக்கு முன்பு போக்சோவில் கைதானார். இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் நேற்று பிறப்பித்துள்ளது.

இதில் தெலங்கானா உயர் நீதிமன்றம் பகீரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.1 லட்சம் பிணைத்தொகை மற்றும் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் பேரில் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணைப் பணிகளுக்கு எந்தத் தடையும் ஏற்படக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் இந்த வழக்கின் சாட்சிகளைப் பாதிக்கக் கூடாது என்று பண்டி பகீரத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Union Minister ,POCSO ,Telangana High Court ,Tirumala ,Pandi Sanjay ,Pandi Bhagirath ,Telangana ,
× RELATED குஜராத்தில் பயிற்சியின்போது...