×

மதமாற்றத்திற்கு மறுத்ததால் கேரள மருத்துவ மாணவி உஸ்பெகிஸ்தானில் கொலை: சக மாணவர் மீது வழக்கு

ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த 22 வயது மருத்துவ மாணவி சவாரியா பசந்த் உஸ்பெகிஸ்தானில் மருத்துவம் படித்து வந்தார். இவருடன் மலப்புரத்தை சேர்ந்த மாணவர் சதருல் அனம் என்பவரும் உடன் படித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் சண்டையில் சதருல் லேப்டாப்பில் தலையில் ஓங்கி அடித்ததில் மாணவி சவாரியா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மாணவன் சதருலை உஸ்பெகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவியின் உடல் ஆலப்புழா மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொலை செய்வதற்கு முன் மாணவி கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் ஹரிப்பாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாணவி சவாரியாவை மதம் மாறுமாறு சதருல் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு சவாரியா மறுத்ததால் அவரை சதருல் கடுமையாக தாக்கி கொன்றதாகவும், மாணவி உடலில் தலை முதல் கால் வரை பல இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags : Kerala ,Uzbekistan ,Alappuzha ,Alappuzha, Kerala ,Satharul Anam ,Malappuram ,
× RELATED குஜராத்தில் பயிற்சியின்போது...