சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி விருகம்பாக்கம் 128வது வார்டில் உள்ள மயான பூமியை மறுசீரமைக்க மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஷ்வரனின் கோரிக்கை ஏற்று திராவிட மாடல் ஆட்சியில் மேயரின் அறிவிப்பிற்கிணங்க மயான பூமியை சீரமைக்கவும், புதிய சிமென்ட் சாலை அமைக்கவும், நிலப்பரப்பை சமன் செய்து மியாவாக்கி காடுகளை உருவாக்கவும், மின் கட்டமைப்பு மற்றும் புதிய காரிய மேடை அமைக்கவும் 2023-2024ம் ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் சுமார் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
தற்போது பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தநிலையில் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேலும் ஏவிஎம் அவென்யூ பகுதியில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடலை மேம்படுத்த பொதுமக்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று ரூ.75 லட்சத்தில் நடைபெற்று வரும் பணிகளையும், காந்திநகர் மற்றும் ஷேக் அப்துல்லா நகரில் நடைபெற்று வரும் புதிய மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளையும் மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஷ்வரன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
அவ்வப்போது, மாநகராட்சி உதவிப் பொறியாளர், வட்ட செயலாளர்கள் மு.கோவிந்தராஜ், வி.ஏ.ராஜா மற்றும் நிர்வாகிகள் நசீர்பாய், வடிவேலு, பரந்தாமன், இந்திராநகர் குடி யிருப்பு நலச்சங்க பால்பாண்டி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
