பந்தலூர்: திருமணத்திற்கு பெற்றோர் மறுத் ததால் காதலன் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இதையடுத்து நரம்பை அறுத்து காதலியும் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (26). இவர் நெல்லியாளம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவரது உறவினர்கள் நேற்று பிரசாந்த்துக்கு தொலைபேசியில் அழைத்தனர்.
அவர் அழைப்பை ஏற்காததால் நகராட்சியை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, பிரசாந்த் கடந்த ஒரு வாரமாக அலுவலக பணிக்கு வரவில்லை என சொல்லி உள்ளனர். இதையடுத்து, நகராட்சி ஊழியர் பந்தலூர் பஜாரில் அவர் தங்கியிருந்த அறைக்கு பார்த்து உள்ளார். கதவை தட்டி திறக்காததால் ஜன்னலை திறந்து பார்த்தபோது அறையில் இருந்த பேன் கம்பியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.
விசாரணையில், பிரசாந்த் காந்தல் பகுதியை சேர்ந்த 20 வயதான ஒரு பெண்னை காதலித்து வந்ததும், அப்பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறி வந்தார். ஆனால், திருமணம் செய்து வைக்காததால் மனம் உடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில், பிரசாந்த் இறந்த சம்பவம் அவரது காதலிக்கு தெரியவந்ததும் அவர் கை நரம்புகளை அறுத்தும், மருந்து குடித்தும் தற்கொலை செய்து கொண்டார்.
