×

வரும் 10ம் தேதி முதல்வர் கரூர் வருகை: சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆய்வு

 

கரூர், ஜூலை 8: ஜூலை 10ம்தேதி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தை சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அன்பு நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கினார். ஜூலை 10ம்தேதி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டப வளாகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதற்காக மண்டபத்தின் வளாகத்தில் உள்ள 10 ஏக்கர் பரப்பளவில் 5000 பேர் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை ஏடிஜிபி அன்பு, கரூர் வந்து இந்த நிகழ்வு நடைபெறும் பகுதியை பார்வையிட்டதோடு, மாவட்ட எஸ்பி உட்பட அனைத்து போலீசார்களுக்கும் தேவையான உத்தரவுகளை வழங்கியதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

Tags : Chief Minister ,Karur ,ADGP ,Tamil Nadu ,Joseph Vijay ,Anbu ,Tamil Nadu… ,
× RELATED கரூர் பகுதியில் மைல்கற்களை மறைக்கும் முட்செடிகள்