×

விவசாயிகள் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்

 

கரூர், ஜூலை 10: ஒன்றிய அரசு வழங்கிடும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம் வேளாண்மைத்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. வேளாண் அடுக்ககம் திட்டம் குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாய நிலங்களை ஒழுங்குபடுத்தி தனித்துவமான அடையாள எண்கள் வழங்கும் பணிகள் இதன் மூலம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தொடர்ந்து பிஎம்கிஷான் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம் பெற வேண்டும். விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பயன்களை பெறுவதற்கு நில பட்டாவில் தற்போதய நில உரிமையாளரின் பெயர், இருப்பது அவசியமாகிறது. மேலும், தற்போதைய நில உரிமையாளர் பெயர் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பழைய உரிமைதாரர்களின் பெயர்கள் இருந்தால் அவை நீக்க வேண்டும். பட்டா இல்லாதவர்கள், தங்களின் பெயரில் பட்டா பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karur ,Agriculture Department ,Union Government ,
× RELATED கரூர் பகுதியில் மைல்கற்களை மறைக்கும் முட்செடிகள்