மணப்பாறையில் மூதாட்டியிடம் 5 பவுன் பறித்த 2 பேர் கைது

 

மணப்பாறை, ஜூன் 29: மணப்பாறை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வருபவர் திருப்பதி மனைவி ஜெயலெட்சுமி(68). இவர் தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வரும் நிலையில், அருகே விராலிமலை சாலையில் குடியிருந்து வரும் மூத்த மகள் கார்த்தியாவை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 17ம் தேதி மாலையில் சென்றவர், பின் மீண்டும் இரவு இளைய மகளுடன் வீடு திரும்பியுள்ளார். விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அருகே பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டி கழுத்திருந்த 5 சவரன் கல் முகப்பு வைத்த செயினை பறித்துக்கொண்டு, உடன் வந்த மற்றொரு நபருடன் பைக்கில் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான மணப்பாறை போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் விஜய்(30) மற்றும் அதே பகுதியினை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சரவணகுமார்(23) ஆகியோரை நேற்று சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடமிருந்து 5 சவரன் நகையை பறிமிதல் செய்து, வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.

 

Related Stories: